ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை!
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாகக் குறைந்துள்ளது குறித்து...
வாரத்தின் முதல்நாளான இன்று (செப். 28) தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாகக் குறைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியிலும் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து, மாலை மேலும் ரூ. 800 குறைந்து, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.13,665-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் ஒரு கிராம் ரூ. 245-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Today (Sept. 28), the first day of the week, the prices of gold and silver have dropped for the second time in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.