முகப்பு
தமிழ்நாடு

பவுனுக்கு ரூ.312 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை (

Updated On : 22 மே 2013, 4:17 am IST
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை (மே 21) ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால், அதன் விலையில் சில நாள்களாக சரிவு காணப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மார்க்கெட் நிலவரம்:

Advertisement

Advertisement

ஒரு கிராம்                -  ரூ.2,485

ஒரு பவுன்                - ரூ.19,880

ஒரு கிராம் வெள்ளி       - ரூ.46.60

ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.43,595

திங்கள்கிழமை நிலவரம்:

ஒரு கிராம்                -  ரூ.2,446

ஒரு பவுன்                - ரூ.19,568

ஒரு கிராம் வெள்ளி       - ரூ.44.50

ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.41,615

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.