முகப்பு
தமிழ்நாடு

சிப்பாய் புரட்சி நினைவு நாள்: ஆட்சியர் மலர் அஞ்சலி

வேலூர், பெங்களூர் சாலை மக்கான் பகுதியில் அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 12 ஜூலை 2013, 3:44 am IST
பகிர்:

வேலூர், பெங்களூர் சாலை மக்கான் பகுதியில் அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், மேயர் பி.கார்த்தியாயினி, அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினர் ம.கலையரசு,

அரசு அலுவலர்கள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை இந்திய சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஆற்காட்டில் இருந்து வந்த ஆங்கிலேய படைகள் கோட்டையை சுற்றி வளைத்து உள்ளே புகுந்து, புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களைக் கொலை செய்தனர்.

இதில் 800-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் விடுதலைப் போராகக் கருதப்படும் இப்புரட்சியின் நினைவாக நினைவுத் தூண் எழுப்பப்பட்டு ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

சிப்பாய் புரட்சியின் 207-ம் ஆண்டு நினைவு தினமான புதன்கிழமை நினைவுத் தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அரசு சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.