அதிகரிக்கும் மின்தடை: முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
மின்தடை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது தொடர்பாக...
தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கோடைக்காலத்தில் மின்தேவையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
இரவு-பகலாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
Advertisement
Advertisement
குறைந்த மின்அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்தச் சூழலில், முதல்வர் விஜய் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Chief Minister Vijay is holding consultations with electricity department officials.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.