முகப்பு
தமிழ்நாடு

குற்றாலத்தில் முதல்முறையாக வாசனை சுவையூட்டும் பொருள்கள் கண்காட்சி

குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் முறையாக வாசனை மற்றும் சுவையூட்டும் பொருள்களின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 1:17 am IST
பகிர்:

குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் முறையாக வாசனை மற்றும் சுவையூட்டும் பொருள்களின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கசகசா, சோம்பு, மிளகு, வெள்ளை மிளகு, ஜாதிபத்ரி, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, சிறு சீரகம், பட்டை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 90 கிலோ எடையுள்ள தாஜ்மகால் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இது தவிர இப்பகுதியில் விளையக் கூடிய இஞ்சி, சோற்றுக் கற்றாழை, பால் கற்றாழை, மிளகாய், மிளகு, கொத்துமல்லி விதை, கொத்துமல்லி, புதினா, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, இலவங்கக்காய், ஜாதிக்காய், கிராம்பு ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.