முகப்பு
தமிழ்நாடு

சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்

நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப். 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் பகுதியில் சிலைகள் தயாரிப்புப் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கியது.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 4:47 am IST
பகிர்:

நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப். 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் பகுதியில் சிலைகள் தயாரிப்புப் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கியது.

விநாயகர் சிலைக்கான அங்கங்கள் தனித்தனியே கொண்டுவரப்பட்டு, சிலையாக வடிவமைத்து, வண்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இவை அனுப்பிவைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து காரைக்கால் பகுதி நிரவியில் சிலை தயார் செய்யும் மையத்தின் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் கூறியது: கடந்த ஆண்டு சுமார் 250 சிலைகள் தயார் செய்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைத்தோம். நிகழாண்டு 350 சிலைகள் வரை தயார் செய்துள்ளோம். 3 முதல் 12 அடி உயரம் கொண்ட சிலைகள் மட்டுமே இங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆஞ்சனேயர், சிவலிங்கத்தின் மேல் விநாயகர், யானை, சிங்கம், ரிஷபம், மயில், அன்னம் ஆகிய உருவங்களுடன் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்காக காகிதம், காகிதக்கூழ், குச்சிமாவு ஆகியவை பயன்படுத்தப்பட்டது. அச்சு மூலம் இக்கலவைகளால் உருவம் மற்றும் அங்கங்கள் தயார் செய்யப்பட்டு, இவைகளை இணைக்கும் பணி இங்கு நடைபெற்று முடிக்கப்பட்டது.

சதுர்த்தி விழாவை சில பகுதியினர் ஒரு வாரம் முதல் 15 நாள்கள் வரை கொண்டாடுகின்றனர். இதற்கு ஏதுவாக சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, சிலைகளை அனுப்பி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.