எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு
மகாகவி பாரதியாரின் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டயபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மகாகவி பாரதியாரின் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டயபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பாரதியார் வேடம் அணிந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாரதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்திரன் தலைமையில், மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள், பாரதி பிறந்த இல்லத்தில் 92 மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பாரதி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு எட்டயபுரம் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள் சான்றிதழ் வழங்கினார்.
அரசு சார்பில்: முன்னதாக, எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு கோவில்பட்டி சார்-ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதி நினைவு இல்லத்துக்குச் சென்று அங்குள்ள பாரதியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தார்.