முகப்பு
தமிழ்நாடு

தில்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்

நதிகள் இணைப்பை வலியுறுத்தி, தில்லியில் செப்டம்பர் 13-ஆம் தேதி, பாரதிய கிசான் சங்கம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருச்சியிலிருந்து 600 விவசாயிகள் ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 1:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

நதிகள் இணைப்பை வலியுறுத்தி, தில்லியில் செப்டம்பர் 13-ஆம் தேதி, பாரதிய கிசான் சங்கம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருச்சியிலிருந்து 600 விவசாயிகள் ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்து தராததால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு, அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கம் சார்பில், செப்டம்பர் 13-ஆம் தேதி, தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, திருச்சியிலிருந்து அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வழக்குரைஞர் பொ.அய்யாக்கண்ணு தலைமையில், 600 விவசாயிகள் பல்லவன் விரைவு ரயில் மூலம் புதன்கிழமை தில்லி புறப்பட்டனர். 6 பெட்டிகளில் செல்லும் இவர்கள், வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தில்லி சென்றடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.