முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 1:56 am IST
பகிர்:

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும். தருண் விஜய்க்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.

இந்த வேளையில், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க வேண்டும் என்று திமுக நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கச்சத்தீவு பிரச்னையில் தமிழக அரசு சுணக்கம் காட்டாமல் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள ஆதாரங்களையும், தமிழக அரசிடம் உள்ள ஆதாரங்களையும் திரட்டி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.