தமிழ்நாடு

அதிமுக சார்பில் நாளை இப்தார் விருந்து

அதிமுக சார்பில் திங்கள்கிழமை (ஆக. 5) இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி

அதிமுக சார்பில் திங்கள்கிழமை (ஆக. 5) இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார்.

அதிமுக சார்பில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணமடைந்தைத் தொடர்ந்து இப்தார் விருந்து ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, இஸ்லாமியர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அதேபோல இந்த ஆண்டு வரும் திங்கள்கிழமை (ஆக. 5) சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அறிஞர்கள், அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT