தமிழ்நாடு

காவல்நிலையத்தில் உட்கார நாற்காலி தந்தனர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்ட தனக்கு போதிய பாதுகாப்பும், காவல்நிலையத்துக்குள் உட்கார நாற்காலியும் தந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஜெயப்பாண்டி

காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்ட தனக்கு போதிய பாதுகாப்பும், காவல்நிலையத்துக்குள் உட்கார நாற்காலியும் தந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

சத்தியமூர்த்தி பவன் முன்னாள் ஊழியர் வளர்மதி அளித்த புகார் அடிப்படையிலான வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மதுரையில் தங்கி தல்லாகுளம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.

வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு  35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சியினருடன் ஊர்வலம் போல வந்த அவர் காலை 10.06 மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்றார். அவருடன் கட்சி பிரமுகர்கள் ராஜசேகரன், வழக்குரைஞர் நீதிராஜன்,ஜெரோம் ஆகியோர் சென்றனர்.

 காலை 10.10 மணிக்கு காவல் நிலையத்துக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இன்று போலீஸ் பாதுகாப்பு நன்றாக இருந்தது. காவல் நிலையத்துக்குள் உட்காரவும் நாற்காலி தந்தனர். வியாழக்கிழமை எங்கள் வாகனம் மீது முட்டை, கல் வீசப்பட்டது. இதுகுறித்து புகார்கள் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT