தமிழ்நாடு

தூத்துக்குடியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு

தி. இன்பராஜ்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருள்சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக  ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சுனாமி பேரழிவு ஏற்பட்டு 11வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால், தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் இந்த சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி சங்குகுழி காலனி கடற்கரையில் மீனவர்கள் மற்றும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் கடலில் சுனாமி போல இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என கடல் தாய்க்கு மலர் தூவியும் பால் உற்றி வணங்கினர். இதைபோல் மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே மெழுகுவத்தி ஏந்தியும், கடற்கரையில் மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT