தமிழ்நாடு

வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி கோவன் உயர் நீதிமன்றத்தில் மனு

தேசிய துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள மக்கள் கலை இயக்கத்தின் பாடகர் கோவன், தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

PTI

தேசிய துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள மக்கள் கலை இயக்கத்தின் பாடகர் கோவன், தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மக்கள் கலை, இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பொறுப்பாளராக இருப்பவர் பாடகர் சிவதாஸ் என்கிற கோவன். இவர், மதுவிலக்கு பிரசாரப் பாடலை எழுதி, இசையமைத்துப் பாடினார். அந்தப் பாடல் வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து கோவன் மீது சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி கைது செய்தனர்,. அவர் மீது தேசதுரோகம், முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்புதல், சமூக அமைதியை சீர்குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள பாடலை அடிப்படையாகக் கொண்டே என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக போலீஸாரிடம் வேறு எந்தவித ஆவணங்களும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் கோவன்.

எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான இந்த வழக்கை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்திள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT