தமிழ்நாடு

புதிய தேர்தல் நெறிமுறைகள்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

DIN

புதிய தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை நாடாளுமன்ற விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தில்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டத் திட்டங்கள் குறித்த தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், 47 தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அவை சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் குற்றவாளிகள் தேர்தல்களில் நிறுத்தப்படுவதைத் தடுப்பது, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை கிரிமினல் குற்றங்களாகக் கருதி நடவடிக்கை எடுப்பது, பணம் கொடுப்பவர்களுக்குச் சாதகமாக செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் செயல்பாட்டைத் தடுப்பது, தேர்தல் விதிகள் மீறப்பட்டால் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குவது போன்ற பரிந்துரைகளும் அடங்கும்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான ஆணையத்தின் நல்ல முயற்சி வரவேற்ககத்தக்கது. அதே சமயம், மத்திய அரசு இந்தப் பரிந்துரைகளை அனைத்து அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் அந்தக் கருத்துகளை ஒரு நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உட்படுதத வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை நாடாளுமன்ற விவாதத்துக்குப் பின்பு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT