சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் 280 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக கட்சி தகவல் தெரிவித்திருக்கிறது.
உடல்நலக் குறைபாடு காரணமாக இரண்டரை மாதங்களாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் மரணமடைந்தார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் 280 பேர் உயிரிழந்ததாக அதிமுக கட்சி தகவல் தெரிவித்துள்ளது. இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மரணமடைந்த 280 பேரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.