மிசா முருகு பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தனது இளமைக் காலத்திலிருந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலே விழுகின்ற வரை கலை நிகழ்ச்சிகள் மூலம், பல குரல்களிலே பேசி கழகத்தை வளர்த்தப் பெருமைக்குரியவர்களில் தம்பி முருகு பாண்டியனுக்கும் தனி இடம் உண்டு. திருவாரூரைச் சேர்ந்த முருகு பாண்டியன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாத கழக மாநாடுகள் இல்லை. நெருக்கடி நிலை காலத்தில் முருகுப் பாண்டியன் கைது செய்யப்பட்டு "மிசா முருகு பாண்டியன்" ஆனார்.
கழகத்தினால் தனக்கு என்ன இலாபம் என்று நினைக்காமல், தன்னால் கழகத்திற்கு என்ன இலாபம் என்று கருதி தன் வாழ்நாள் எல்லாம் கழகத்தின் வளர்ச்சிக்காகப் பிரச்சாரம் செய்த முருகு பாண்டியன் மறைந்ததற்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.