தமிழ்நாடு

விராலிமலை அருகே உரிய ஆவணமின்றி ரூ.5.95 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

விராலிமலை அடுத்த மாத்தூரில்  எவ்வித ஆவணமும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 5.95 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

உதயகுமார்

விராலிமலை: விராலிமலை அடுத்த மாத்தூரில்  எவ்வித ஆவணமும் இல்லாமல் சுமையுந்தில்(லோடு ஆட்டோ) கொண்டுவரப்பட்ட ரூ. 5.95 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

விராலிமலை தொகுதிக்குள்பட்ட மாத்தூர் பகுதியில் வட்டார துணை ஆய்வர்(சர்வே துறை) எம். காளிதாஸ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்த 5 சுமையுந்தில்(லோடு ஆட்டோ) ஆடு ஏற்றிக்கொண்டு வந்தவர்களிடம் சோதனையிட்டதில், அதில் ரூ. 5.95 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அதிலிருந்த ராமநாதன், ராஜகோபால்,கந்தையா ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் ஆடு வாங்க வந்ததாக கூறியதாக தெரிவித்தனர். தொடர்ந்து விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். டெய்சிகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல், விராலிமலை தொகுதி குன்னத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் ரூ. 44.800 ஆயிரத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர், பணத்தை கைப்பற்றி தேர்தல் அலுவலர் ஏ. முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT