தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்: வாசன் வலியுறுத்தல்

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, பொது, தனியார் துறைகளில் தமிழ் மொழி முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளிலும் மற்றும் ஏ.டி.எம். மையங்களிலும் ஆங்கில மொழி மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக சேமிப்பு கணக்கு புத்தகங்கள், காசோலை, வரைவோலை ஆகியவற்றிலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் தமிழ் மொழி பயன்பாட்டில் இல்லை. இதனால் பெரும்பாலும் சிரமப்படுவது வங்கியின் வாடிக்கையாளர்கள் முக்கியமாக கிராமப்புறத்தைச் சார்ந்த சாதாரண மக்கள் தான்.

பொது மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், பொதுத்துறைகள் ஆகியவற்றில் பல்வேறு மொழி பேசும் அதிகாரிகள், தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதனால் சாதாரண மக்கள் அவர்களோடு உரையாடுவதற்கும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மாநில மொழி பேசும் அதிகாரிகளை நியமித்தல், அதிகாரிகள் மாநில மொழியை பேசுவதற்கு பயிற்சி அளித்தல், விண்ணப்பங்கள் மாநில மொழியில் இடம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசும், அந்தந்த துறைகளும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள அவர்களது நியாயமான கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, பொது, தனியார் துறைகளில் தமிழ் மொழியும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT