தமிழ்நாடு

கியான்ட் புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது: வானிலை ஆய்வு மையம்

DIN

சென்னை: கியான்ட் புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் மியான்மர் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT