தமிழ்நாடு

காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரியது: ஹெச்.ராஜா

காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது என,..

தினமணி

ராமநாதபுரம்:  காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது என, பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
 ராமநாதபுரத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 காஷ்மீர் பிரச்னை குறித்து புது தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தப் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பிரிவினைவாத தலைவர்களின் குழந்தைகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இதுவரை யாரும் கொல்லப்படவில்லை. அவர்களது குழந்தைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக படித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாமர மக்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என காஷ்மீர் முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது காஷ்மீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
 கேரளத்தில் பாஜக அலுவலகத்தின் மீது சமூக விரோத சக்திகள் குண்டு வீசியிருக்கின்றனர். பாஜக தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு எதையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் கட்சியின் தேசிய செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT