தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களை சேர்க்காததை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம்

தினமணி

புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களை சேர்க்காததை கண்டித்து, ஆதிதிராவிடர்  நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அரசு சட்டக்கல்லூரி அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பது வழக்கம். ஆனால் இந்த விடுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களை சேர்க்கவில்லை என்றும், உடனே அவர்களை சேர்க்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் மாணவர்கள் மனு கொடுத்தனர். இந்த மனுவில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த சட்டகல்லூரி மாணவர்கள் இன்று தட்டாஞ்சாவடியில்  ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்பு அலுவலகத்திற்கு உள்ளே சென்று மாணவர்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கு வந்த ஊழியர்களை மாணவர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கோரிமேடு போலீசார், மாணவர்களை கலைந்து போகுமாறு கூறியதால் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, விடுதியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தன் பேரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆதிதிராவிடர் அலுவலக ஊழியர்களை தடுத்து நிறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT