தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்தி பரப்பிய மருத்துவருக்கு ஜாமீன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக கைதான போலி பெண் மருத்துவர் ராமசீதாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக கைதான போலி பெண் மருத்துவர் ராமசீதாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பெரம்பூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராமசீதா (52) கடந்த பிப்ரவரி 25 -ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ராமசீதா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT