தமிழ்நாடு

அதிமுகவை சீர்குலைக்க பாஜக முயற்சி: சிபிஐ மாநில செயலர் முத்தரசன் குற்றச்சாட்டு

DIN

பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுக-வை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஆர்.முத்தரசன்.
புதுகை மாவட்டம், பொன்னமராவதியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆட்சியும், ஆளுங்கட்சியும் தனது சொல்படி நடக்கவேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆர்கே நகர் தேர்தல் ரத்து, இரட்டை இலை சின்னம் முடக்கம் போன்றவற்றை பாஜக தலைவர்கள் முன்கூட்டியே சொல்கிறார்கள்.
தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, தொடர் நடவடிக்கைகள் இல்லை. தற்போது, அவர் மீண்டும் பணியாற்றி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித் துறை, தேர்தல் ஆணையம் ஆகிய துறைகளை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதா எனத் தெரியவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சட்டத்துக்கு புறம்பான முறையில் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. தேர்தலை சந்திக்க மாநில அரசு அச்சப்படுகிறது. மத்திய அரசு தேசிய நதிநீர் ஆணையம் அமைப்பது என்பது காவிரி பிரச்னையை பின்னுக்குத் தள்ளும் நடவடிக்கை. மாநில அரசு கேட்கும் போதிய இழப்பீட்டினை மத்திய அரசு வழங்க வேண்டும். சாலைகளை மாற்றம் செய்து மதுக்கடைகளை அமைப்பதை விடுத்து, பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT