தமிழ்நாடு

தமிழக கேரள எல்லைப் பகுதியில் மாவோஸ்யிஸ்டுகளின் சுவரொட்டியால் பரபரப்பு

DIN


நீலகிரி: அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்ற மலையாளத்தில் எழுதப்பட்ட சுவரொட்டியால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லை பகுதியான நாடுகாணியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புஞ்சைகொல்லி ஆதிவாசி காலனி. இந்தப் பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட குழு ஒன்று அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்று மலையாள மொழியில் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டியை ஒட்டியவர்களில் ஒருவர் மாவோயிஸ்டு தலைவர் சோமன் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர், போலீஸார் மற்றும் நீலகிரி நக்சல் ஒழிப்பு சிறப்பு காவல் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT