தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வளவு காலம் ஆகும்? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

DIN


மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை? கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வழக்கில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று ஆய்வு செய்து அறிவிக்க எத்தனை நாள் ஆகும்? மருத்துவமனை அமைக்க எவ்வளவு காலம் ஆகும்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய குழு அமைத்துள்ளோம் என்ற மத்திய அரசின் பதிலை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT