தமிழ்நாடு

வேண்டாதவர்கள் மீது மட்டும் வருமான வரித் துறை சோதனை ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

DIN

அரசுக்கு வேண்டாதவர்கள் மீது ஒருதலைப்பட்சமாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுவது ஏன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் ஒரு தலைப்பட்சமாக அரசுக்கு வேண்டாதவர் மீது மட்டுமே சோதனை நடத்துவதற்காக இயக்கப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கோ, சட்டத்தின் ஆட்சிக்கோ எந்த விதத்திலும் ஏற்றது இல்லை.
எனவே, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை பாஜகவின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT