தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது: விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

DIN


சேலம்: டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

24 மணி நேரத்தில் எல்லா வகையான வைரஸ் காய்ச்சலையும் அறிய வசதிகள் உள்ளன. டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

நன்னீரில் உருவாகும் கொசு பகலில் மட்டுமே கடிக்கும். டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சேலத்தில் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்த உடனேயே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க, ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்கு சுய மருத்துவம் பார்க்க வேண்டாம். தமிழகத்தையொட்டியுள்ள இலங்கையிலும் கேரளாவிலும் டெங்கு காய்ச்சல் பாதித்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT