தமிழ்நாடு

சென்னையில் குடியிருப்பு வாங்குகிறீர்களா? இதை உறுதி செய்து கொள்வது அவசியம்!

DIN


சென்னையில் குடியிருப்புக் கட்டடத்தில் வீடு வாங்குவோருக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது, அதாவது, கட்டுமான நிறுவனம், வீட்டை எப்போது கட்டி முடிக்கும் என்பது குறித்து அறிவிக்க வேண்டும்.

ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு முன்பே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம், அதற்கான விளம்பரத்திலேயே, வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்து அறிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

அதாவது, வீடு வாங்குபவர்களுக்கு பல்வேறு பாதுகாப்புகளை உறுதி செய்யும்வகையில், 2016 ஆண்டு மே 1ம் தேதி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 2016 சட்டமாக இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, ஒரு கட்டுமான நிறுவனம், குடியிருப்புத் திட்டங்களை துவங்கும் முன்பு முறையாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். விளம்பரத்தை வெளியிடும் முன்பே அதனை பதிவு செய்து, விளம்பரத்தில் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், குடியிருப்புக் கட்டடம் இந்த தேதியில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்ததை விட கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால், அதற்கு வீடு வாங்கியவர்களுக்கு, கட்டுமான நிறுவனம் உகந்த இழப்பீடு அளிக்கவும் வகை செய்கிறது.

எனவே, இனி வீடு வாங்குவோர் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டு வழக்குத் தொடரும் நிலைக்கு ஆளாகும் நிலை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT