தமிழ்நாடு

மதுக்கரை அருகே காரில் தீ விபத்து: நிதி நிறுவன அதிபர் கருகி சாவு

DIN

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே கேரளத்தை நோக்கிச் சென்ற காரில் ஏற்பட்ட தீ விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர் நிதி நிறுவன அதிபர் திலீப்குமார் (38). இவர், தனது மனைவி ஆஷா (35), மகன் ஏசு (13), மகள் ஏத்தல் (11) ஆகியோருடன் கேரளத்தில் உள்ள தனது அண்ணன் அசோக் வீட்டுக்கு கோவை வழியாக காரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
கார் மதுக்கரை அருகே சீரபாளையம் பிரிவு அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்துள்ளது. இதையறிந்த திலீப்குமார் காரை நிறுத்தி விட்டு மனைவி ஆஷா, குழந்தைகளை கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார். அவர்கள் இறங்கிய சிறிது நிமிடத்திலேயே காரில் தீப்பற்றியது.
இதையடுத்து, திலீப்குமார் தான் அணிந்திருந்த சீட் பெல்டை கழற்ற முயன்றுள்ளார். ஆனால், பெல்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை. இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இவ்விபத்தில் திலீப்குமார் தீயில் கருகி உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தீயணைப்பு, காவல் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT