தமிழ்நாடு

'அனைத்துப் பிரிவு பொறியாளர்களுக்கும் இஸ்ரோவில் பணி வாய்ப்பு உள்ளது'

DIN

இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பு அனைத்துப் பிரிவு பொறியாளர்களுக்கும் உள்ளது என அதன் இயக்குநர் பி.குன்னி கிருஷ்ணன் கூறினார்.
சென்னையை அடுத்த தாழம்பூர் அக்னி பொறியியல் கல்லூரியின் 12 -ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் 392 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது:
மக்களின் தேவை, வசதி , எதிர்பார்ப்புக்கேற்ப அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க மாற்றங்களும், வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, முன்னேற்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையான முன்னேற்றத்தை நாம் எட்டிப் பிடித்துள்ளோம்.
விண்வெளி தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், இதர நாடுகளுக்கும் உதவி வருகின்றோம். இஸ்ரோவில் பணிபுரிய அனைத்துப் பிரிவு பொறியாளர்களுக்கும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT