தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: 1 லட்சம் இடங்களில் சிலைகள் நிறுவல்

DIN

தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி சென்னை மாநகரத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விநாயகர் சிலை வைத்து திருவல்லிக்கேணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு, இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை, விழிப்புணர்வு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு . தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 25 -ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT