தமிழ்நாடு

உண்ணாவிரதம் எதிரொலி: நளினியை சந்திக்க முருகனுக்குத் தடை

DIN

ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி வேலூர் மத்திய சிறையினுள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதனால் அவரது மனைவியை மூன்று மாதங்கள் சந்திக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் முருகன் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையினுள் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய முருகன் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதையடுத்து 15 தினங்களுக்கு ஒரு முறை பெண்கள் சிறையில் உள்ள மனைவி நளினியை சந்திப்பதற்கு மட்டுமல்லாது, உறவினர்களையும் மூன்று மாதங்கள் சந்திக்க முருகனுக்கு சிறைத் துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT