தமிழ்நாடு

உந்து சக்தி குறைவு: தாமதமாக குன்னூருக்கு வந்த மலை ரயில்

DIN

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.

நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் மலை ரயில் கடந்த சில நாள்களாக அடிக்கடி உந்து சக்தி குறைவு ஏற்படுவதால் மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி முதல் இப்பிரச்னை இருந்து வந்தாலும் கடந்த சில நாள்களாக இப்பிரச்னை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப் பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மலை ரயில் படிப்படியாக உந்து சக்தி குறைந்து மெதுவாக ஊர்ந்து வந்தது. இதனால், ஆங்காங்கே நின்று வந்ததை ரயில்வே பணியாளர்கள் அவ்வப்போது சீர் செய்து குன்னூர் வரை கொண்டு சேர்த்தனர்.
இரண்டு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூருக்கு வந்து சேர்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
எனவே, ரயில்வே நிர்வாகம் அடிக்கடி பழுது ஏற்படும் இந்த மலை ரயிலின் பழுதுகளை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று மலை ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT