தமிழ்நாடு

கர்நாடகாவில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததா? உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்

DIN


புது தில்லி: கர்நாடகாவில் மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில் பிரச்னையில்லை என்றால் கர்நாடகாவில் புதிய அணை கட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியதாகத் தகவல்கள் வெளியானது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த தகவலை முதல்வர் பழனிசாமியும் மறுத்தார்.

இந்த நிலையில், இன்று இதே வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், கர்நாடகாவின் எல்லைக்குள் எந்தப் பகுதியிலும் அணை கட்டக் கூடாது. காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். புதிய அணை கட்டுவது தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.

வழக்கு விசாரணையை நேரில் ஆய்வு செய்ய, தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் உச்ச நீதிமன்றம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்ட தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT