முகப்பு
தமிழ்நாடு

சிறையிலிருந்து பரோலில் விடுதலை ஆனார் பேரறிவாளன்!

தமிழக அரசு ஒரு மாத பரோல் வழங்கி அரசாணை பிறப்பித்ததை அடுத்து வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுதலையானார். 

Updated On : 24 ஆகஸ்ட் 2017, 9:14 pm IST
பகிர்:

வேலூர்: தமிழக அரசு ஒரு மாத பரோல் வழங்கி அரசாணை பிறப்பித்ததை அடுத்து வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுதலையானார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு,மே 21-ஆம் தேதி மனித வெடிகுண்டு மூலம்  ஸ்ரீபெரும்புதூரில்  கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி,முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட      ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஆனால் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் அவரை விடுதலை செய்யக் கோரி அவரது தயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். அல்லது குறைந்த பட்சம் பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் அவரது தந்தை உடல்நலக் குறைவால் வாடுவதால் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அரசிடம் அவரது தாயார்   சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு இன்று இரவு கிடைத்தது. உடனடியாக அது தொடர்பான சிறை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியேறினார்.

கைது செய்யப்பட்ட 26 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பேரறிவாளன் தற்பொழுதுதான் சிறையிலிருந்து வெளி வருகிறார். தற்பொழுது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு செல்கிறார். அவருடன் 15 பேர் கொண்ட காவல்துறை குழு உடன் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments