தமிழ்நாடு

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு! 

DIN

சென்னை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு,மே 21-ஆம் தேதி மனித வெடிகுண்டு மூலம்  ஸ்ரீபெரும்புதூரில்  கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி,முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட      ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு முதலில் தூக்கு தணடனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையானது ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டது.

ஆனால் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் அவரை விடுதலை செய்யக் கோரி அவரது தயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். அல்லது குறைந்த பட்சம் பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார்.

சமீபத்தில் அவரது தந்தை உடல்நலக் குறைவால் வாடுவதால் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அரசிடம் அவரது தாயார்   சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அது கிடைத்தவுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT