தமிழ்நாடு

பாம்பன் பகுதியில் கடல் சீற்றம்

DIN

பாம்பன் கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டு, 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், ரயில் பாலத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதின.
ராமநாதபுரம் மாவட்டம், பாக்நீரிணைப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், வடக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களான பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரயில் பாலத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதின. 
இதனால், பாலத்தில் ரயில்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் மெதுவாகச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT