தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் தொழிலாளர்கள் 5 பேர் சாவு

DIN

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், பானாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரெங்கநாதன் மகன் ஜனார்த்தனன் (50), செல்வராஜ் மகன் டெல்லிபாபு (19), சீனிவாசன் மகன் ராஜேஷ் (21), முனுசாமி மகன் சேட்டு (36), ரெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சங்கர் (30), உமாபதி மகன் பாலாஜி (21), ராமன் மகன் ஹரிபாபு (33), மணி (50), வெங்கடேஷ் மகன் மாதவன் (35), முனுசாமி மகன் குமார் (35), சித்திரை மகன் பார்த்தீபன் ( 35), கோபால் மகன் நரசிம்மன் (38), சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் நரசிம்மன் (42). இவர்கள் அனைவரும், ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
இந்நிலையில், காரைக்குடியில் நடைபெறவுள்ள ரயில்வே பணிக்காக மேற்கண்ட 13 பேரும் பானாவரம் கிராமத்தில் இருந்து காரில் காரைக்குடி புறப்பட்டனர். காரை குமார் ஓட்டியுள்ளார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கார் வந்தபோது, சாலை மையத் தடுப்பு சுவர் மீது ஏறி வலதுபுற சாலைக்கு சென்றது. அப்போது, கரூரில் இருந்து வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி கார் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குமார், பார்த்தீபன், சங்கர், கோபால் மகன் நரசிம்மன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாடாலூர் போலீஸார் பலத்த காயமடைந்து, இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த டெல்லிபாபு, ஜனார்த்தனன், ராஜேஷ், சேட்டு, பாலாஜி, ஹரிபாபு, மணி, மாதவன், நரசிம்மன் ஆகியோரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில், மணி, நரசிம்மன் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், நரசிம்மன் செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரான கரூர் மாவட்டம், தாந்தோணிமலையைச் சேர்ந்த ராஜனை (39) கைது செய்தனர்.
இந்த விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT