தமிழ்நாடு

கடலூரில் 146வது தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பண்ருட்டி சீனிவாசன்

கடலூர் : வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் 146வது தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகளால் வடலூரில் சத்திய ஞானசபை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான 146-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. பிறகு ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளை காலை 6 மற்றும் 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், இரவு 7 மற்றும் 10 மணிக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT