தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி

DIN

ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக, வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
ஆதரவுக் கடிதத்தை வைத்து: ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக எம்.எல்.ஏ.,க்கள் அளித்த ஆதரவு கடிதங்களை, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து சசிகலா வணங்கினார்.
அதன்பின், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அண்ணாவின் நினைவிடத்திலும் அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வந்தபோது, சசிகலாவுக்கு கட்சியினர் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.
ஆளுநர் மாளிகைக்கு: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பிறகு, இரவு 7.05 மணி அளவில், சசிகலா ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT