தமிழ்நாடு

பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன் வருகை

DIN

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு முன்னாள் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன் வருகை தந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ஞானதேசிகனின் இடைக்கால பணி நீக்கத்திற்கான உத்தரவை தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தமிழகத்தின் முக்கிய அரசுத் துறைகளான நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஞானதேசிகன், தலைமைச் செயலாளராக 2.12.14 அன்று பதவியேற்றார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். (தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்).

டிட்கோ தலைவராக பணியாற்றி வந்த ஞானதேசிகன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இடைக்கால பணி நீக்கத்தில் ஞானதேசிகன் இருந்தார். தற்போது இடைக்கால பணி நீக்க உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதோடு அவருக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியலில் நிலவரும் பரபரப்புக்கு மத்தியில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு ஞானதேசிகன் வருகை தந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT