தமிழ்நாடு

காங்கிரஸ் ஆதரவு யாருக்கு? உண்மையை உடைத்தார் திருநாவுக்கரசர்

DIN


சென்னை: உங்கள் ஆதரவு தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கா அல்லது அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுகரசர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

ஆனால், எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஏதாவது ஒரு பக்கத்தில் இருப்பவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களை சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து என்று கூறினார்.

மேலும், பாஜக நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, பாஜகவுக்குள்ளேயே இது தொடர்பாக இரு வேறு கருத்துகள் உள்ளன. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சுப்ரமணிய சுவாமி வலியுறுத்துகிறார். ஆனால் அவரது கருத்து பாஜக கருத்து அல்ல, என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்திலேயே கட்சிக்குள் பிளவு இருப்பது தெரிகிறது என்றார் திருநாவுக்கரசர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT