தமிழ்நாடு

அரசு வழக்குரைஞராக யார் யார் நியமிக்கப்பட வேண்டும்? புதிய விதிகளை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

அரசு வழக்குரைஞர்களாக யார், யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வகுக்கப்பட்ட புதிய வரைவு விதிகளை அறிவிப்பாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வி.வசந்தகுமார், ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு விவரம்:
அரசு வழக்குரைஞர் பதவி என்பது அரசியல் பதவி கிடையாது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு தலைமை வழக்குரைஞர் முதல் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்குரைஞர்கள் வரை அனைவரும் ஆளுங்கட்சியின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர்.
நேர்மை, தகுதி, திறமை, அனுபவம் பெற்றவர்களை அரசு வழக்குரைஞர்களாக வெளிப்படையான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. ஆகையால், தகுதி வாய்ந்தவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை வகுப்பதற்கு, நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்குரைஞர்கள் ஏ.எல்.சோமையாஜி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இதுதொடர்பான புதிய வரைவு விதிகளை வகுத்து, உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.13) இருவரும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு விதிகளை ஏற்கிறோம். இந்த வரைவு விதிகளில் ஏதேனும் ஆட்சேபம் இல்லாவிட்டால், அவற்றை மார்ச் 16 -ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிடலாம். மாறாக ஆட்சேபம் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து அடுத்த விசாரணையின்போது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் எனக்கூறி, விசாரணையை மார்ச் 16 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT