தமிழ்நாடு

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராக பதிவாளர் உத்தரவு!

DIN

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் உறுதி படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் தணடனை பெற்றுள்ள சசிகலா ஆஜராவது தொடர்பாக பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார். அதில் சசிகலா மற்றும் தண்டனை பெற்றுள்ள முவரும் பெங்களூரு நீதிமன்ற 48-ஆவது அறையில் நீதிபதி அசோக் நாராயண் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

ஆனால் ஆஜராவதற்கு காலக்கெடு குறித்து எதுவும் அந்த உத்தரவில் கூறப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT