தமிழ்நாடு

சட்டப்பேரவையில் எனது வாக்கு யாருக்கு? பகிரங்கமாக அறிவித்தார் நட்ராஜ்

DIN


சென்னை: அதிமுகவினரை ஓரணியாக இணைக்கும் பணியில் தோல்வியடைந்தேன். இப்போது யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

இவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, அதிமுக அணியில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்ய நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானது. ஒரே கட்சியைச் சேர்ந்த இரு அணிகள் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போகின்றன.

இந்த நிலையில், ஒரு முடிவெடுக்க வேண்டியது எனது கடமை. எனது முடிவு, மயிலாப்பூர் தொகுதி மக்களின் கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் நான் வாக்களிக்க உள்ளேன். நான் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்க உள்ளேன்.

நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அதிமுகவில் நியமிக்கப்பட்டேன். நான் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்மையாக நடப்பேன். எனது மனசாட்சிக்கும், மக்களின் கருத்துக்கும் எதிராக என்னால் செயல்பட முடியாது. நான் தொடர்ந்து மயிலாப்பூர் தொகுதி மக்களுக்காகவே பணியாற்றுவேன். இதற்கு அனைவரும் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT