தமிழ்நாடு

கூவத்தூரில் இருந்து கார்கள் மூலம் புறப்பட்டனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்

DIN

சென்னை: கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து அமைச்சர்களின் கார்கள் மூலம் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் புறப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கைவாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் பேரவைக்கு புறப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும், அமைச்சர்களின் கார்களில் புறப்பட்டு வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள் புறப்படும் போது, அவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் கார்கள் மூலம் சென்னை புறப்பட்டனர். அப்போது தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நிச்சயம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என்றும் குறிப்பிட்டனர்.

கடந்த 10 நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் தனியார் நட்சத்திர கோல்டன் பே விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT