தமிழ்நாடு

ஜெயலலிதா இறப்பு குறித்து வதந்தி: போலி பெண் மருத்துவர் கைது

DIN

முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து வதந்தி பரப்பியதாக, போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே. நகரில் தீபா ஆதரவாளர்கள் அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ச.ராமசீதா (52) என்பவர் பேசினார். அப்போது அவர், "2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-இல் போயஸ் தோட்ட வீட்டில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு வரும்போது இறந்த நிலையில்தான் இருந்தார். அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்தேன்' என்றார். இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகி வெங்கடாசலம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் எஸ்.ஜார்ஜிடம் அளித்த புகார் மனுவில், "தங்களது மருத்துவமனையில் ராமசீதா வேலை செய்தது கிடையாது. அவர் திட்டமிட்டு மருத்துவமனையின் பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பிவருகிறார்' என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், மருத்துவராக அல்லாத ராமசீதா அப்பல்லோ மருத்துவமனையில் எந்தப் பொறுப்பிலும் பணிபுரியவில்லை என்பதும் ஊட்டச்சத்து ஆலோசகருக்கான பட்டய படிப்பு படித்துள்ள அவர் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வதந்தியை பரப்பியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராமசீதாவை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, எழும்பூரில் உள்ள பெருநகர 5-வது நீதித்துறை நடுவர் மன்ற உத்தரவின்பேரில், புழல் பெண்கள் சிறையில் ராமசீதா அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT