தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்கள்: பெண் கைது! 

அப்பல்லோ மருத்துவர் என்று கூறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

DIN

சென்னை: அப்பல்லோ மருத்துவர் என்று கூறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர் தன்னை சென்னை அப்பல்லோ  மருத்துவமமனையை சேர்ந்த பெண் மருத்துவர் என்று கூறிக் கொண்டு,கடந்த மாதம் சென்னையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்களின் தீபா பேரவை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். 

அப்பொழுது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பொழுதே சுய நினைவின்றிதான் இருந்தார் என்னும்படியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனால் பெரும்பரபரப்பு உண்டானது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்சைக்குரிய கருத்துக்களை கூறி மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்குவதாக அப்போல்லோ மருத்துவமனை சார்பாக சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமசீதா மருத்துவரே இல்லை என்று தெரிய வந்தது. இதனால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று  வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT