தமிழ்நாடு

கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் பந்தயம்: 10 இளைஞர்கள் கைது

DIN

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நீலாங்கரை போக்குவரத்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கானத்தூர் அருகே உத்தண்டியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி 16 விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்கள் வேகமாக சென்றன. அவற்றில் 10 கார்களை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
இருப்பினும் சில இளைஞர்கள் மீண்டும் அங்கிருந்து கார்களை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் சௌந்தரராஜன், கார் முன் நின்று கொண்டிருந்ததை கவனிக்காமல் கார் எடுக்கப்பட்டதால், காரின் முன்பகுதி அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த செளந்தரராஜன், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணை: இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இருப்பினும் காரை ஓட்டி வந்த இளைஞர்கள், தாங்கள் சென்னையில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களின் மகன்கள் என்றும், தங்களை விடுவிக்குமாறும் கோரினர். இருப்பினும் பிடிபட்ட 10 கார்களையும் போலீஸார், கானத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.
இதையடுத்து கார் பந்தயத்தில் ஈடுபட்டதாக விக்னேஷ்வரன், சித்தார்த் சங்கர், விஷால், யஷ்வந்த், வினாயக் வினேஷ், சங்கர் ராமன், பிரசன்ன பாபு, கரம் சந்த், கீர்த்தி ராஜகோபால், ராகவ் கிருஷ்ணா ஆகிய 10 பேர் மீதும் சாலையில் அதிவேகமாக சென்றது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், ஆய்வாளர் சௌந்தரராஜன் மீது காரை ஏற்றியது தொடர்பாக ராகவ் கிருஷ்ணா மீது தனியாக ஒரு வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக 10 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பிடிபட்ட கார்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.4 கோடி இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT