தமிழ்நாடு

விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

DIN

சென்னை: தமிழகமெங்கும் உள்ள விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகமெங்கும் உள்ள விளைநிலங்கள் மிக அதிக அளவில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டுமனைகளாக பதிவு செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்ட து. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த  மனுவில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரியிருந்தது.

அந்த வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஒருங்கிணைந்த செயல்திட்டம் எதனையும் இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த நிலையில் விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்து விட்டது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்த செயல்திட்டத்தினை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து, வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT